லட்வியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் பிரதமர்

நேட்டோ அமைப்பின் இராணுவ நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கிவரும் கனேடிய படைகளைச் சந்திகும் நோக்குடன் பிரதமர் ஜஸ்டின் ரூடோ இன்று (திங்கட்கிழமை) லட்வியாவுக்கு (Lettonie) விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.


இதனை தொடர்ந்து பிரசெல்ஸ் செல்லும் பிரதமர் அங்கு இந்த வாரத்தில் நடைபெறவுள்ள நோட்டோ அமைப்பின் மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

நேட்டோ அமைப்பில் கனேடிய படைகளின் பங்களிப்பினை மீள் உறுதிப்படுத்தும் வகையில் பிரதமரின் இந்தப் பயணம் அமைவதாக கருதப்படுகிறது.

2014 ஆம் ஆண்டில் ரஷ்ய ஆதரவுக் குழுக்கள் உக்ரெய்னின் கிழக்கு பிராந்தியமான கிரைமியாவை ஆக்கிரமித்ததை அடுத்து, அங்கு நேட்டோ படைகளால் தொடங்கப்பட்ட இராணுவ நடவடிக்கைக்கு கனடா தலைமையேற்று வருகின்றது.