அனல் பறக்கும் வெப்பம் 33 பேர் உயிரிழப்பு

மொன்றியல் பகுதியில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக கியுபெக் மாகாணத்தில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 29 ஆம் திகதியில் இருந்து குறித்த பகுதியில் தொடரும் அனல் நிறைந்த வெப்பம் (45C) காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக மொன்றியலில் 18 பேர்கள் இறந்துள்ளனர். பல நாட்களாக தொடரும் கொடூரமான வெப்பநிலையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாளொன்றிற்கு 1,200 தடவைகள் அவசர மருத்துவ சேவை பிரிவிற்கு அழைப்பினை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.