18 ஆண்டுகளுக்கு பின்னர் எழுந்த குற்றச்சாட்டு: பிரதமர் மறுப்பு

பெண் செய்தியாளரிடம் 18 ஆண்டுகளுக்கு முன்னர் தகாத முறையில் நடந்து கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டினை பிரதமர் ஜஸ்டின் ரூடோ மறுத்துள்ளார்.

2000ம் ஆண்டில், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், (Creston Valley Advance) கிரெஷ்டன் வேலே அட்வான்ஸ் பத்திரிக்கையின் பெண் நிருபரிடம், ஜஸ்டின் ரூடோ தகாத முறையில் நடந்து கொண்டதாக பிரச்சனை எழுந்தது.

இந்த நிலையில் அரசியல் விமர்சகர் (Warren Kinsella) வாரன் கின்செல்லா, 18 ஆண்டுகளுக்குப் பின் தற்போது மீண்டும் இப்பிரச்சனை தொடர்பில் ரூடோவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதில் அளித்த அவர், குறித்த தினம் சிறப்பான ஒன்றாகவே இருந்ததாகவும், தவறான சம்பவங்கள் எதுவும் நிகழ்ந்ததாக நினைவில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.