பொது சேவை மேலாளர்களின் ஊதியம் முடக்கம்: ஒன்ராறியோ முதல்வர்

ஒன்ராறியோவின் புதிய முதல்வரான தேர்வு செய்யப்பட்ட டக் வோட் பொது சேவை மேலாளர்களின் ஊதியத்தை முடக்கவும் நிர்வாக மற்றும் நிர்வாக இழப்பீடுகளை மதிப்பீடு செய்யுமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அந்தவகையில் மேலாளர்களுக்கு திறமைக்கேற்ற ஊதியம் பாதிக்கப்பட மாட்டாதென தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவானது, அரசாங்க செலவினங்ககை கட்டுப்படுத்தும் அவரது இறுதி முயற்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் டக் வோட் முன்னர் பொது சேவைகளின் பணியமர்த்தலை முடக்கத்தின் கீழ் வைத்திருந்தார். இந்த சம்பவம் குறித்த கருத்து கோரிக்கைக்கு வோட்டின் காரியாலயம் உடனடியாக பதிலளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.