காணாமற்போன 5 வயது சிறுவன் சடலமாக கண்டெடுப்பு!

Saddleridge பகுதியில் காணாமற்போயிருந்த 5 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் நீர்நிலை ஒன்றில் இருந்து கடந்த சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை குறித்த சிறுவன் காணாமற்போனதை அடுத்து அவரது பெற்றோர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.

இந்நிலையில் குடும்பத்தவரும், அயலவரும் இணைந்து தேடுதல் மேற்கொண்டிருந்த போது குறித்த சிறுவன் சென்ற துவிச்சக்கர வண்டியை கண்டுள்ளனர்.

பின்னர் தொடர்ந்தும் மேற்கொண்ட தேடுதலில் குறித்த சிறுவன் சடலமாக நீர்நிலை ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் குறித்த விபத்திற்கான காரணங்கள் தெரியவராத நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.