புலிகளால் யாழ்ப்பாணத்தில் சல்லடை போட்டு தேடப்பட்ட ஆயுதங்கள் ராமேஸ்வரத்தில் 32 ஆண்டுகளின் பின் மீட்பு.

1983 ஆண்டுக்கு பின்னர் இலங்கையை சேர்ந்த பல்வேறு தமிழ் போராளிக்குழுக்களுக்கு இந்தியாவின் அரச புலனாய்வு பிரிவான ரோ ‘வினுடாக இந்தியா ஆயுத பயிற்சி அளித்து ஆயுதங்களையும் வழங்கி வந்தது. காலப்போக்கில் இக்குழுக்களை இந்திய அரசு தனது பொம்மைகளாக பாவிக்கத்தொடங்கியபோது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தவிர்ந்த அனைத்து குழுக்களும் இந்திய அரசின் பொம்மைகளாகவே மாறியிருந்தது.

இதில் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) இந்திய உளவுத்துறையின் நம்பிக்கைக்கு உரியதாகவும் அவர்களுக்கு மிகவும் விசுவாசமாகவும், டெலோ இயக்க தலைவர் திராவிட முன்னேற்ற கழக தலைவர் கருணாநிதியின் செல்லப்பிள்ளையாகவும் இருந்தார்.

இச்சந்தர்ப்பத்தில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் அமைப்பினரும் அதன் தலைவர் பிரபாகரனும் உண்மையில் தமிழீழமக்களுக்காக உண்மையாக போராடுகின்றார்கள் என்பதை அறிந்து மறைந்த முதல்வர் M.G.R அவர்கள் பிரபாகரனை ஆதரித்து பல உதவிகளும் செய்துவந்தார்.

திம்பு பேச்சுவார்த்தை தோல்வியுற்றதை தொடர்ந்து இலங்கை ராணுவத்துக்கு எதிரான கரந்தடி தாக்குதல்கள் அணைத்து ஆயுத குழுக்களாலும் மேற்கொள்ளப்பட்டு இலங்கையின் வடக்கின் இராணுவ முகாம்கள் அனைத்தும் 1986 மார்ச் மாதம் புலிகளின் முற்றுகைக்குள் வந்தது.  இதன்போது மற்ற போராட்ட குழுக்களும் பங்குபற்றியிருந்தாலும் ஒரு கட்டுக்கோட்பானா அமைப்பாக செயல் பட்டது விடுதலை புலிகள் அமைப்பே.

இச்சந்தர்ப்பத்திலேயே 1986 மே மாதம் டெலோ இயக்கம் விடுதலை புலிகளை அளிக்கும் நடவடிக்கையில் தன்னை தயார் படுத்துக்கொண்டிருந்தது. இதன் போது டெலோ இயக்க தலைவரும் இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்து பல விடுதலை புலி போராளிகளை கைது செய்து சித்திரவதைகள் என தனது முழு அழிப்பு வேலையை ஆரம்பிக்க நாள்குறித்த வேளையிலேயே அதிரடியாக விடுதலைப்புலிகள் தமது நடவடிக்கைகளை சில  நாட்களுக்கு முன்னரே கிட்டு தலைமையில் ஆரம்பித்தனர்.

அடுத்த மூன்று நாட்களில் தமிழீழப்பகுதிகளில் டெலோ இயக்கம் முடக்கப்பட்டு அதன் தலைவரும் கொல்லப்பட்டிருந்தார்.

இந்த நடவடிக்கைகளுக்கு சிலவாரங்கள் முன் இந்தியா ரோ’வினுடாக தமிழ் குழுக்களுக்கு (விடுதலைப்புலிகள் உட்பட) ஆயுதங்கள் வழங்கியது. வழங்கப்பற்றவற்றில் 90 வீதமான ஆயுதங்கள் டெலோ இயக்கத்தினருக்கே வழங்கப்பட்டன. மிகுதி மற்றைய தமிழ் குழுக்களுக்கு கண்துடைப்பாக வழங்கப்பட்டன.

டெலோ முகாம்களை விடுதலை புலிகள் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தபோது சிலவாரங்களுக்கு (1986 April) முன் இந்தியாவில் வைத்து டெலோவிட்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் எதுவும் டெலோ இயக்க முகாம்களில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் வந்துசேரவில்லை.

இதனால் டெலோ இயக்கத்தை அழித்த பின்னரும் அவர்கள் தளங்கள், ஆயுதங்களை மறைத்துவைக்க கூடிய இடங்கள், அறிந்தவர்கள் என பல இடங்கள் யாழ்ப்பாணத்தில் புலிகளால் சூசை தலைமையில் சல்லடை போட்டு தேடப்பட்டது.

டெலோ இயக்கம் அளிக்கப்பட்டு சில நாட்களின் பின்னர் குழப்பத்தில் இருந்த பல மக்களை, பிரமுகர்களை, ஊர் குழுக்களை சந்தித்து புலிகள் இயக்க பொறுப்பாளர்கள் விளக்கங்களை அளித்துவந்தனர்.

அவ்வாறே வல்வெட்டித்துறையில்  சென் ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் முதலுதவி பயிட்சியாளர்களை சந்தித்த சூசை (பின்னாளில் புலிகளின் கடற்படை தளபதி) இந்த தகவலை தனது விளக்க கூட்டத்தில் பகிர்ந்திருந்தார்.  (குறித்த இந்த ஆயுதங்கள் டெலோவின் முகாம்களில் இருந்த டெலோ போராளிகளின் கைகளில் இருந்திருக்குமாயின் மிகப்பெரும் இழப்புகளை இயக்கங்கள் சந்தித்திருக்கும்)

பின்னாளில் கூட இந்த ஆயுதங்கள் தமிழ் ஈழப்பகுதியில் புலிகளின் காலப்பகுதிவரை (2009*) கண்டுபிடிக்கப்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

அந்த கால கட்டத்தில் 10 ஆயிரம் துப்பாக்கி தோட்டாக்கள், ராக்கெட் லாஞ்சர், கண்ணிவெடிகள் என்பது மிகப்பெரிய ராணுவ தளபாடங்களேயாகும்.

இந்தியாவால் கொடுக்கப்பட்டதையே இந்தியா இப்போது தோண்டி எடுக்கின்றது.