நகராட்சி வேட்பாளர் ஆக விருப்பமா? வேட்பாளர் தகவல் அமர்வு!

எதிர்வரும் நகரசபை தேர்தலில் நகராட்சி வேட்பாளர் ஆக விருப்பமா? என்ன தகுதி வேணும். எப்படி வேட்பாளர் ஆவது, வெல்வது எப்படி. நிதியை பெறுவது எப்படி. சரியான ஒரு பிரச்சாரத்தை நடத்துவது எப்படி?


எதிர்வரும் ஜூலை மாதம் 27ம் திகதி மாலை 2 மணிவரை உங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம்.

நீங்கள் மார்க்கம் நகரசபையில் பதிவு செய்யப்பட்ட வேட்பாளரா? அல்லது வேட்புமனு தாக்கல் செய்ய ஆர்வமா? அல்லது எதுவுமே தெரியாதா. எல்லோரும் எப்படி பலதடவைகள் இவ்வளவு பணம் செலவு செய்து தேர்தலில் போட்டியிடுகின்றார்கள் என்ற ஆச்சரியமா?

2018 நடக்கும் மாநகர சபை தேர்தல் தொடர்பான தகவலை வழங்க ஒரு தகவல் வழங்கும் நிகழ்வை மார்க்கம் நகரசபை ஒழுங்குசெய்துள்ளது. இதில் யாரும் கலந்துகொள்ளலாம்.

வாருங்கள், கலந்துகொள்ளுங்கள். ஆச்சரியங்களிலும்; அதிர்ச்சிகளிலும் இருந்து வெளியில் வர, உங்கள் கண்களை திறக்க, ஏன் பலர் தகுதிகளையும் மீறி போட்டியிடுகின்றார்கள் என்பதை அறிந்துகொள்ள இது ஒரு அரிய சந்தர்ப்பம்.

கடந்த தேர்தல்களில் உண்மையிலேயே மக்களுக்கு சேவை செய்ய போட்டியிட்டவர்கள் எத்தனை? தேர்தலில் பணம் சம்பாதித்தவர்கள் எத்தனை? தேர்தலில் போட்டியிட்டு உரிய முறையில் நகராட்சிக்கு கணக்கு முடிக்காமல் அடுத்த தேர்தலில் போட்டியிடும் தகுதி இழந்தவர்கள் எத்தனை.

தோத்தாலும் பணம் வரும்; எப்படி? வெறும் $100 டொலருடன் பிரபல்யம் ஆவது எப்படி? சரித்திரத்தில் வருவது எப்படி.

வாருங்கள். அறிந்துகொள்வோம். இந்த தேர்தலில் வேட்பாளர்கள் செலவுசெய்யும் ஒவ்வொரு சதங்களும் உங்கள் பணமே.

இந்த கருத்தரங்கின் தகவல்கள் மார்க்கம் நகராட்சிக்கு மட்டுமன்றி, சகல நகராட்சிகளுக்கும் பொருந்தும். எனவே யாரும் கலந்துகொண்டு தகவல்களை அறிந்துகொள்ளலாம்.

வேட்பாளர் தகவல் அமர்வு

காலம்: ஜூன் 27, 2018

நேரம்: 6 PM – 8 PM

இடம்: Markham Civic Center – 101 Town Center Boulevard (Canada Room)

Candidate Information Session
Wednesday June 27, 2018
6 – 8 PM
Markham Civic Center – 101 Town Center Boulevard (Canada Room)