கஞ்சா சட்டப்பூர்வமானது! மசோதா நிறைவேற்றம்

கஞ்சாவை பயன்படுத்துவதற்காக சட்டப்பூர்வமாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) செனட் சபையில் 52- 29 என்ற வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.
கடந்த 2001 ஆண்டு கஞ்சாவை மருத்துவத்திற்காக பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு தேர்தலின் போது பிரதமர் அதனை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, உற்சாகத்திற்காகவும் கஞ்சா அனுமதிக்கப்படும் என தெரிவித்ததுடன், 18 வயதுக்கு கீழ்உள்ளவர்கள் 30 கிராம் வரை கஞ்சா வைத்திருப்பதற்கு அனுமதி அளிப்பதற்காக திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
அந்தவகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற கீழவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மேலவையில் சில நாட்களுக்கு முன் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவில் கஞ்சாவை வளர்ப்பது, விநியோகிப்பது மற்றும் விற்பனை செய்வது போன்ற வரையிலான அம்சங்கள் சார்ந்த கட்டுப்பாடுகள் இதில் உள்ளன.
மேலும், இது தொடர்பில் ஜஸ்டின் ட்ரூடோ டுவிட்டரில், பிள்ளைகளுக்கு கஞ்சா எளிதில் கிடைப்பதாகவும், சமூக குற்றவாளிகள் லாபம் சம்பாதிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.  மேலும் இச்சட்டத்தின் மூலம் அதற்கு முடிவு கட்டியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இச்சட்டத்துக்கு அரசியலமைப்பு ஒப்புதல் இந்த வாரத்தில் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.