ஒரு மாதங்களின் பின்னர் காணாமற்போன மாணவியின் சடலம் மீட்பு!

ரொறன்ரோ பகுதில் வசித்து வந்த (PhD) மாணவி ஒருவர் கடந்த மாதம் காணாமல் போனதை அடுத்து நயாகரா பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஒண்டாரியோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்டவர் 30 வயதுடைய ஜாபியா அப்சல் என்ற பெண்ணே என்றும், இவர் கடந்த வெள்ளிக்கிழமை ஒண்டாரியோ ஏரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் யார்க் பல்கலைக்கழகதின் மாணவி என்றும் இவரை கடந்த மே மாதம் 10 திகதியை இறுதியாக பார்த்ததாகவும், அன்றைய தினம் காலை அவர் குறித்த ஏரிக்கு சென்றுள்ளதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இவரது மரணம் தொடர்பில் சந்தேகம் ஏதும் ஏற்படவில்லை எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடந்த மாதம் அவர் காணாமல் போனதை அடுத்து 100 ற்கும் அதிகமானவர்கள் தேடுதலில் ஈடுபட்டதாகவும், நகர் முழுவதும் இது தொடர்பில் 15,000 பதாதைகளை ஒட்டியதாகவும் அந்த பெண்ணின் சகோதரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர் இறப்பு ஈடுசெய்ய முடியவில்லை என்றும், குறிப்பாக பெண்களின் உரிமைகளுக்காக போராடியவர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.