துப்பாக்கி சூட்டில் 2 சிறுமிகள் காயம்: சந்தேகநபர் கைது

ஸ்கார்பரோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 2 சிறுமிகள் படுகாயமடைந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை மாலை, 11 ற்கும் மேற்பட்ட சிறுவர்கள் மைதானத்திற்குள் விளையாடிக் கொண்டிருக்கும் போது வெளியே காரில் வந்த ஒருவர் துப்பாக்கி சூட்டினை நடத்தியுள்ளார்.
முதியவர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட குறித்த துப்பாக்கி சூட்டில் 2 சிறுமிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மார்க்கம் பகுதியை சேர்ந்த ஷெல்டன் எரியா என்ற 21 வயது இளைஞர் ஒருவரை கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட நபர் இதற்க்கு முன்னர் 2 முறை கொலை முயற்சி செய்ய முற்பட்டமை, 2 பேரை கொடூரமாக தாக்கியமை மற்றும் போதைப்பொருளை கடத்தும் நோக்கில் உடைமையில் வைத்திருந்தமாய் போன்ற பல குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் 2 சந்தேகநபர்களை தேடி வருவதாகவும் ரொறன்ரோ பொலிஸார் கூறியுள்ளனர்.</p>