ஸ்கார்பரோவில் துப்பாக்கிச் சூடு: 2 சிறுமிகள் படுகாயம்

ஸ்கார்பரோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 2 சிறுமிகள் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) மாலை 11 ற்கு மேற்பட்ட சிறுவர்கள் மைதானத்திற்குள் விளையாடிக் கொண்டிருக்கும் போது வெளியே காரில் வந்த ஒருவர் துப்பாக்கி சூட்டினை நடத்தியுள்ளார்.

இந்த தாக்குதலில் 5 மற்றும் 9 வயது சிறுமிகள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனை அடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளிடமும் விசாரணையை மேற்கொண்ட போது “மைதானத்தில் ஒரு முதியவர் இருந்தார். இதன் போது மைதானத்திற்கு வெளியில் காரில் இருந்து இறங்கிய நபர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இருப்பினும் எங்கள் மீது குண்டு பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் மேலதிக விசாரணைகளை ரொறன்ரோ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.