மார்க்கம் நகரசபையின் 7ஆவது தொகுதி யாருக்கு?

வரும் அக்டோபர் மாதம் 22ஆம் திகதி நடைபெறவுள்ள நகரசபை தேர்தலில் Markham நகரசபையின் 7ஆவது தொகுதி கவுன்சிலர் பதவிக்கு பிரபல நடன ஆசிரியை மலர் வரதராஜா அவர்கள் போட்டியிடவுள்ளார்.

Malar Varatharajah

இன்று (ஜூன் 14, 2018) தனது வேட்பு மனுவை அவர் பதிவு செய்துள்ளார்.

கடந்த மே 01 திகதி இத்தொகுதியில் வசிக்கும் சமூகசேவகரும், பொறியியலாளருமான கிள்ளிவளவன் செல்லையா அவர்கள் இத்தொகுதியில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொகுதியின் நகரசபை உறுப்பினராக பதவிவகித்த லோகன் கணபதி அவர்கள் தற்போது நடந்து முடிந்த (ஜூன் 07, 2018) ஒண்டாரியோ மாகாண சபைத் தேர்த்தலில் PC கட்சியின் சார்பில் போட்டியிட்டு பெரும் வெற்றிபெற்றதை அடுத்து இத்தொகுதியில் பல தமிழ் வேட்பாளர்கள் களமிறங்குகின்றார்கள்.

பல் சமூகத்தினர் வாழும் இத்தொகுதியில் பல்லினத்தவரும் தேர்தலில் போட்டியிடும் நிலையில் தமிழரின் வாக்குகள் சிதறி 2006 ஆண்டுமுதல் தமிழ் உறுப்பினரை கொண்ட இத்தொகுதியை இழக்காமல் தக்கவைக்கும் முகமாக சகலரும் புரிந்து செயல்படவேண்டிய தருணமிது.

Markham நகரசபையின் 7ஆவது தொகுதி யாருக்கு?  தமிழனுக்கா? அல்லது எங்கள் போட்டியில் வேறு யாருக்காகவும் போக வாய்ப்பா?