ஒன்ராறியோ மாகாணசபை தேர்தலில் இரு ஈழத் தமிழர்கள் வெற்றி

நடந்து முடிந்த ஒன்ராறியோ மாகாணசபை தேர்தலில் முற்போக்கு கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் மார்க்கம் தோன்கில் பகுதியில் போட்டியிட்ட லோகன் கணபதி மற்றும் முற்போக்கு கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியில் போட்டியிட்ட விஜய் தணிகாசலம் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.

ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத்துக்கு தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

யூன் 7ஆம் நாள் கனடாவின் பெரிய மாகாணமான ஒன்ராரியோவில் நடைபெற்ற 42வது பாராளுமன்றத்திற்கான 124 தொகுதிகளிலான தேர்தலில் இரண்டு ஈழத்தமிழர்கள் விஜய் தணிகாசலமும் லோகன் கணபதியும் வரலாற்றில் முதற்தடவையாக தெரிவாகி வரலாறு படைத்துள்ளனர். மூன்றாவது தமிழர் ரோசன் நல்லரட்ணம் வெறும் 81 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

அவர்கள் பெற்ற வாக்குகளின் விபரம் வருமாறு

ஸ்காபரோ ரூச்பார்க்
விஜய் தணிகாசலம் – பிசி – 16224
பெலிசியா சாமுவேல் – என்டிபி – 15261
சுமி சான் – லிபரல் – 8785

மார்க்கம் தோன்கில்
லோகன் கணபதி – பிசி – 18943
ஜெனிற்றா நாதன் – லிபரல் – 9160
சின்டி கக்கல்பேர்க் – என்டிபி – 8010

ஸ்காபரோ கில்வூட்
மிட்சி கன்டர் – லிபரல் – 11965
ரோசன் நல்லரட்ணம் – பிசி – 11884
ரொம் பக்வூட் – என்டிபி – 9910