அமெரிக்க அதிபரின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது – ஜஸ்ரின் ட்ரூடோ

கனடா அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்ற கனடா அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்ற அமெரிக்க அதிபரின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கனடியப் பிரதமர் பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.

கனடிய இராணுவ வீரர்கள் பல ஆண்டு காலமாக அமெரிக்கர்களுடன இணைந்து பல்வேறு போர்க்களங்களில் ஒன்றாக செயற்பட்டு வந்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்த நிலையில் கனடா அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற கூற்றினை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் விபரித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு கனடா பெருமளவான உருக்கை வழங்கிவரும் வரும் நிலையில், தற்போது அதற்கான இறக்குமதி வரியை கடந்த வாரத்திலிருந்து 25சதவீதமாக அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்த வரி அதிகரிப்பினை நியாயப்படுத்தி கருத்தும் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்க அதிபரின் அந்த கருத்துக்கள் தொடர்பில் நேற்றுக் காலையில் ஊடகம் ஒன்றுக்கு செய்வி வழங்கியுள்ள கனடியப் பிரதமர், கனடா அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்ற கூற்று ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல என்பதுடன், அது கனடாவை அவமதிக்கும் செயல் எனவும் கூறியுள்ளர்.

அத்துடன் கடந்த வாரம் டிரம்ப் உருக்கிற்கு விதித்துள்ள வரி காரணமாக அமெரிக்கா நிதி நெருக்கடியையும், அதன் வலியையும் சந்திக்கப் போகிறது என்றும் கூறியுள்ள கனடிய பிரதமர், அமெரிக்கர்கள், குறிப்பாக டிரம்பின் ஆதரவாளர்களின் காதுகளில் இந்த செய்தி தெளிவாக போய்ச் சேர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கனடாவில் இருந்து உருக்கிற்கான இந்த வரி விதிப்பினை நீக்குவதற்காக, கனடாவிடம் இருந்து பதிலுக்கு எதனை டிரம்ப் எதிர்பார்க்கின்றார் என்பது தமக்குத் தெரியவில்லை எனவும், எனினும் கனடா அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்ற கூற்று ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல என்பதுடன், அவமதிக்கும் செயல் எனவும் அவர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை சீனாவில் இருந்து அளவுக்கு அதிகமான உருக்குப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்ற வகையில், அமெரிக்கா கனடா ஆகிய இரண்டு நாடுகளுமே ஒரு மாதிரியான பாதிப்புக்களையே எதிர்கொள்கின்றன எனவும் அவர் விபரித்துள்ளார்.

கனடியர்கள் மிகவும் பண்பானவர்கள் மரியாதையானவர்கள் பொறுமையானவர்கள் என்ற போதிலும், அமெரிக்க அதிபர் மேற்கொள்ளும் எந்தவிதமான தாக்குதல்களையும் ஏற்றுக்கொள்பவர்களாக இருக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். என்று கனடியப் பிரதமர் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.