அச்சுறுத்தல் விடுக்கும் மின்னஞ்சல் அனுப்பியதாக ரொஷான் நல்லரட்னம் மீது குற்றச்சாட்டு

ஒன்ராறியோ பழமைவாத கட்சியின்  வேட்பாளரான ரொஷான் நல்லரட்னம் தேர்தல் பிரச்சாரத்தின் போது அச்சுறுத்தல் விடுக்கும் மின்னஞ்சல் அனுப்பியதாக குற்றச்சாட்டுக்கு முகங்கொடுத்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் ஒன்ராறியோ பொலிஸார் உறுதி செய்துள்ளனர். ரொஷான் நல்லரட்னத்தின் மின்னஞ்சலில், “எனக்கு எதிராக மோசமான பிரச்சாரம் செய்ய வேண்டாம், தேர்தலுக்குப் பிறகு நான் பாடம் கற்பிப்பேன்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது 96 பேருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதில் பெரும்பான்மையானது தமிழ் சமூகத்திற்கு சென்றுள்ளதாகவும், புதிய ஜனநாயகக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், நல்லரட்னம் தனது நடத்தை குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் Andrea Horwath அழைப்பு விடுத்துள்ளார்.

தான் இதுவரை மின்னஞ்சலை பார்க்கவில்லை, ஆனால் தேர்தல் களம் சூடாக இருப்பதாகவும், அவர் நேர்மறைத்தன்மையுடன் இருப்பதாகவும், Doug Ford குறிப்பிட்டுள்ளார்.

scarborough-Guildwood பகுதி வேட்பாளர் நல்லாரட்னம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக ரொறன்ரோ பொலிஸ் சேவையில் பணியாற்றியுள்ளார்.

எனினும் இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் ரொஷான் நல்லரட்னம் எந்தவொரு தகவல்களையும் வெளியிடவில்லை.