தமிழரும் கனடாவும் – ஒரு பார்வை

நான் இங்கு பகிரவிருக்கும் செய்திக்குள் பல ஆழமான பார்வைகள் உண்டு. அவை ஒவ்வொன்றாக தீவிர ஆய்விற்கு உட்படுத்த வேண்டியவை. எனினும் முதற்கண் அவற்றை மேலெழுந்த வாரியாக உங்கள் முன் வைக்கின்றேன். எமது நாட்டின் மக்கள் கணிப்பு இறுதியாக 2016 இல் நடைபெற்றது. அது குறித்த தரவுகள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. தற்போது ஒன்ராரியோவில் தேர்தல் என்பதால் அவற்றை ஆராய முயன்ற போது சிக்கிய விடயங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.


1) எவ்வளவு தான் சென்சஸ் எனப்படும் இம்மக்கள் கணிப்பின் போது தாய் மொழி தமிழ் எனப்பதியுங்கள் என்றாலும் அது என்னவோ தரம் குறைந்த செயலாகவே எம்மில் பலருக்கு படுகிறது. கனடாவில் தமிழ் தாய் மொழி என அடையாளப் படுத்தியவர்கள் வெறும் 140720 பேரே. அதாவது அரைவாசிக்கு மேல் தம்மை அடையாளப்படுத்தவில்லை. இது தமிழ் இனத்தின் சிதைவை கனடாவில் சுட்டி நிற்கிறது. ஏனென்றால் எமக்கு நீண்டகாலம் முன்னர் வந்தவர்களே தங்கள் மொழியில் தான் இன்றும் அடையாளப்படுத்துகின்றனர். பின்னர் இது குறித்த தரவுகளுடன் வருகின்றேன்.

கனடாவில் தாய் மொழி தமிழ் என அடையாளப் படுத்தியவர்கள்
நாடுமாநிலம்மொத்தம்ஆண்பெண்
கனடா1407206908071640
ஒன்ராரியோ1176305731060320
கியூபெக்1360067156885

2) ஒரு விடயத்தை அவாதானித்திருப்பீர்கள். ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை எங்கும் அதிகம் என்பதை. தாயகத்திலும் போரிற்கு பின்னான நிலை இதுவே. அவ்வாறாயின் சமூகமாக இதனை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றோம். ஆண்களை விட பெண்கள் அதிகம் படிக்கின்றார்கள் வேறு. மிகவும் வரவேற்கத்தக்க விடயம். இது பல சவால்களை அவர்கள் வாழ்வில் ஏற்படுத்துகிறது. தமிழர் சமூகம் சுருங்கி வருவதில் உள்ள சவாலை துணிவுடன் சமூகம் மாற்றங்களை வெளிப்படுத்தி எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது?

பிராந்திய வாரியாக கனடாவில் தாய் மொழி தமிழ் என அடையாளப் படுத்தியவர்கள்
பிராந்தியம்மொத்தம்ஆண்பெண்
ரொரன்ரோ575352793529600
பீல்227801111511665
யோர்க்215451040511140
டூரம்786538204040

3) தமிழ்ர் சமூகம் பரந்து விரி;ந்து வாழுகிறது என்ற பார்வை எங்கும் உண்டு. ஆனால் உலகின் இரண்டாவது பெரிய நாட்டில் நாம் இன்றும் பெரு நகரங்களுக்குள்ளேயே பெரும்பாலும் சருங்கி வாழுகின்றோம் என்பதையே தரவுகள் சுட்டிநிற்கின்றன.

நகர வாரியாக கனடாவில் தாய் மொழி தமிழ் என அடையாளப் படுத்தியவர்கள்
நகரம்மொத்தம்ஆண்பெண்
மார்கம்1462570157610
பிராம்டன்1269561956500
ஒட்டாவா241512301185
மொன்றியல்1349066556835
வன்கூவர்327516951580

4) சில தொகுதிகளிலேயே பெரும் ஆதிக்கம் செலுத்தும் நிலையிலேயே இன்றும் உள்ளோம். ஆனால் நெருங்கிய தேர்தல் போட்டியொன்றில் தீர்மானிக்கும் சக்தியாக குறைந்நது 20 தொகுதிகளிலாவது வாழுகின்றோம். தமிழரும் போட்டியிடும் யூன் 7ஆம் நாள் ஒன்ராரியோ மாகாண பாராளுமன்றத் தேர்தலில் இவ்எண்ணிக்கை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்று பார்ப்போம். ஸ்காபுரோ ரூச்பார்க் மார்க்கம் தோன்கில் ஸ்காபுரோ கில்வூட் ஆகிய தொகுதிகளில் தமிழர்கள் போட்டியிடுகின்றனர்.

தொகுதி வாரியாக கனடாவில் தாய் மொழி தமிழ் என அடையாளப் படுத்தியவர்கள்
தொகுதிமொத்தம்ஆண்பெண்
ஸ்காபுரோ ரூச்பார்க்1104553055740
ஸ்காபுரோ வடக்கு937045404830
ஸ்காபுரோ மத்தி837540854280
மார்க்கம் தோன்கில் 812539154210
ஸ்காபுரோ கில்வூட்743535603875
மார்க்கம் ஸ்ரோவில்636030753285
ஸ்காபுரோ ஏஜின்கோட்452021552365

இதேவேளை கனடாவில் வாழும் சிங்கள மக்கள் தொகை என்ன என்ற கேள்விக்கான பதிலாக ஒரு தரவு. ஆனால் அவர்கள் பெரும்பாலும் தம்மை தங்கள் மொழி சார்ந்து அடையாளப்படுத்தியிருப்பதையும் காணலாம். அது போலவே வேறும் பல இனங்கள் பின்னர் ஒரு பதிவில் விரிவாக பார்ப்போம்.

கனடாவில் வாழும் சிங்கள மக்கள் தொகை
 மொத்தம்ஆண்பெண்
சிங்களம் - கனடா1633580508285
சிங்களம்-ஒன்ராரியோ1016549305235
Written & Analytics by: Nehru Gunaratnam