ரொறன்ரோவில் 3 பிள்ளைகளின் தாய் கொலை: விசாரணைகள் ஆரம்பம்!

ரொறன்ரோவில் East York பகுதியில் உள்ள வீட்டில் நேற்று (சனிக்கிழமை) பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் அயலவர்கள் அதிகாலை 2.15 மணிக்கு வழங்கிய தகவலின் அடிப்படியில் பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த வீட்டில் (41) வயதுடைய பெண் தனிமையில் இருந்த போது ஜன்னல் வழியாக நுழைந்த நபர் ஒருவர் அவரை கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது குறித்த விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார், சம்பவம் குறித்து யாருக்காவது தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர். இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட பெண் 3 பிள்ளகளின் தாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.