NAFTA பேச்சுவார்த்தையில் தாமே வெற்றி பெறுவோம்: ட்ரம்ப் நம்பிக்கை!

வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடான NAFTA தொடர்பிலான பேச்சுவார்த்தையில், தாமே வெற்றி பெறுவோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடான NAFTA தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் அதன் உறுப்பு நாடுகளான அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோவிடையே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், கனடாவை சமாளிப்பது பெரும் சிரமமான காரியமாக உள்ளது. அத்துடன் நான் எதனைப் பற்றி பேசுகின்றேன் என்பதனை மக்கள் விரைவில் அறிந்து கொள்வார்கள். தனது இந்த நடவடிக்கைகள் மூலம் அமெரிக்காவின் வாகன உற்பத்தி துறையினரும், அதன் பணியாளர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்.

இந்த பேச்சுவார்த்தைகளின் போது கனடா மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாடுகளை சமாளிப்பதும், அவர்களுடன் ஈடுகொடுத்துச் செல்வதும் மிகுந்த சிரமமான காரியமாக உள்ளது. அவர்களின் வேண்டுகோள்களையிட்டு நாம் மகிழ்ச்சி கொள்ளவில்லை” என கூறினார்.