ரொறன்ரோ துப்பாக்கிச் சூடு! முக்கிய காணொளியை வெளியிட்ட பொலிஸார்!

கனடா ரொறன்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சமபவத்தின் பின்னர் தலைமறைவான குற்றவாளிகள் குறித்த சிசிடிவி காட்சிகளை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த துப்பாக்கி பிரயோகத்தில் கனடாவில் பிரபல பாடகர் டிரேக்குடன் இணைந்து உணவு விடுதி ஒன்றை ஆரம்பித்த 28 வயதான ஜாக்ஸன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் பொலிஸார் குற்றவாளிகள் தொடர்பில் காணொளியை வெளியிட்டுள்ளனர்.

குறித்த இளைஞரை கருப்பு நிற Honda Civic வாகனம் அவரை இடைமறித்து, அந்த வாகனத்தில் வந்த இருவர் இவரை நோக்கி துப்பாக்கியால் சுடத்துவங்கியுள்ளனர்.

இந்த நிலையில் ஜாக்ஸன் அந்த மர்ம நபர்களிடம் இருந்து தப்பிக்க ஓடியுள்ளார். இருப்பின்னும் துரத்திச் சென்ற கும்பல் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளனர்.

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இறந்த நிலையில் இருந்த ஜாக்ஸனை மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் அவரை அனுமதித்திருந்தாலும், காயங்கள் காரணமாக ஜாக்ஸன் மரணமடைந்ததாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையிலேயே குறித்த வீடியோ காட்சிகளை தற்போது வெளியிட்ட பொலிஸார், குறித்த நபர்கள் தொடர்பில் தகவல் தெரியவரின் பொதுமக்கள் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.