மிசிசாகா குண்டு வெடிப்பு: சந்தேகநபர்களை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

மிசிசாகா குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களை கண்டுபிடிக்க பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இச்சம்பவத்தின் சி.சி.டிவி காணொளியை வெளியிட்டுள்ள பொலிஸார், இதன் மூலம் அவர்களை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், குறித்த தாக்குதல் தீவிரவாத தாக்குதலுக்குரிய எவ்வித அடையாளமும் இல்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரொறன்ரோ நகருக்கு அருகே ஒன்றாரியோவில் உள்ள மிசிசாகா, பாம்பே பெல் எனப்படும், இந்திய உணவகமொன்றிலேயே நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மர்ம நபர்கள் இருவர் நடத்திய இந்த வெடி குண்டு தாக்குதலில் 15பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.