பற்றிக் பிரவுன்க்கு எதிரான முக்கிய குற்றச்சாட்டு பொய், CTV இப்போது ஒப்புக்கொள்கிறது!

பற்றிக் பிரவுன்க்கு எதிரான ஒன்டாரியோ முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சியின் தலைமையின் முக்கிய குற்றச்சாட்டு – அவர் ஒரு வயது குறைந்த உயர்நிலைப் பள்ளிப் பெண்ணுக்கு மதுபானம் வழங்கினார் என்பது உண்மை இல்லை – CTV News இப்போது ஒப்புக் கொள்கிறது.


குறித்த பெண் Barrie உயர்நிலைப்பள்ளியில் ஒரு மாணவியாக இருந்தபோது, ​​தேசிய கன்சர்வேடிவ் எம்.பி. யாக இருந்த பற்றிக் பிரவுன் ஒரு மதுபான விடுதியில் இருந்து தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார், பின்னர் மதுபானம் வழங்கினார், பின்னர் தனது அறைக்கு அழைத்துச் சென்று, வாய்வழியாக செக்ஸ் கேட்டார்; குறித்த பெண்ணின் இக்குற்றச்சாட்டே CTV News ஆல் வெளியிடப்பட்டு பற்றிக் பிரவுன் தலைமைத்துவ பதவி இழந்த காரணம்.

வயது குறைந்த பெண் என்ற அடிப்படையில் இது ஒரு பெரிய குற்றச்சாட்டாக வைக்கப்பட்டது.

ஆனால் இப்போது குறித்த பெண் அவர் தான் அச்சமயம் சட்டப்பூர்வ குடிக்கும் வயதில் இருந்ததாகவும் மற்றும் உயர்நிலை பள்ளியை முடித்திருந்ததாகவும் கூறுகிறார்” என்று செவ்வாயன்று வெளியிடப்பட்ட CTV செய்தி ஆன்லைன் கட்டுரை கூறுகிறது.

எது எப்படியோ, ஒண்டாரியோ முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைத்துவத்தில் இருந்த போட்டியே (அண்ணன் எப்போடா போவான் திண்ணை எப்போ காலி ஆகும்னு காத்துகிட்டு இருந்தோர் ) ஒரு காரணத்தை பெரிதுபடுத்தி; உரிய முறையில் விசாரணை முடிவதற்குள்ளாகவே கட்சி பொறுப்பில் இருந்து பேட்ரிக் பிரவுன் தூக்கி எறியப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.

ஒரு பொய்யான குற்றச்சாட்டின் பேரில் ஒரு மக்கள் தொண்டன் கட்சியில் தலைமையில் இருந்து அவமானப்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்டுள்ளார் என்பது இப்பொழுது தெளிவு.

இப்பொழுது அவருக்கு எதிரான குற்றசாட்டு புனையப்பட்ட ஒரு கதை என்பதை செய்தியை வெளியிட்டவர்களே (CTV NEWS) ஒப்புக்கொள்ளும் நிலையில் பாதிக்கப்பட்டவருக்கான (Patrick Brown) பரிகாரம் கட்சியிடம் இருந்தே ஆரம்பிக்கப்படவேணும்.

தன் கட்சியின் தலைமையை; உள்ளிருந்தே தூக்கி எறிந்தவர்கள், குழிபறித்தவர்கள் எல்லோரும் நாளை ஒண்டாரியோவை ஆளும் நிலை வந்தால் மக்கள் நிலை என்ன? நாட்டில் காட்டாட்சி நடைபெறும்.

கட்சி பற்றிக் பிரவுன்க்கு செய்யும் பரிகாரத்திலேயே மக்களின் நம்பிக்கை தங்கியுள்ளது.