வெனிசுவேலா உடனான உறவுகளைக் குறைத்துக் கொள்கிறது கனடா

வெனிசுவேலா நாட்டுடனான அரசதந்திர உறவுகளைக் குறைத்துக் கொள்ளவுள்ளதாக கனடா தெரிவித்துள்ளது.

வெனிசுவேலா நாட்டில் தேர்தல் நடாத்தப்பட்டு மீண்டும் அந்த நாட்டின் அதிபராக நிக்கோலஸ் மாடூரோ தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆனால் குறித்த அந்த தேர்தல் சர்ச்சைக்குரியதாக அமைந்துள்ள நிலையில், அனைத்துலக அளவில் கடுமையான கண்டனங்களை பெற்றுள்ளது.

இந்த நிலையிலேயே தென் அமெரிக்க நாடானா வெனிசுவேலாவுடனான அரசதந்திர உறவுகளை உடனடியாக நடப்புக்கு வரும் வகையில குறைத்துக் கொளளவுள்ளதாக கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட் தெரிவித்துள்ளார்.

வெனிசுவேலாவில் அதிபர் நிக்கோலஸ் மாடூரோவை மீண்டும் அதிகாரத்தில அமர்த்தும் வகையில் நடாத்தப்பட்டுள்ள இந்த தேர்தலானது, சனநாயக மீறல் என்பதுடன், முறைகேடானது எனவும் அவர் சாடியுள்ளார்.

அந்த நாட்டுக்கான தமது புதிய தூதரை அனுப்பப்போவதில்லை எனவும், அந்த நாட்டுக்கு மேலும் அழுத்தங்களைக் கொடுக்கும் நடவடிக்கையாக அவ்வாறு செய்ய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இதனைத் தெரிவித்துள்ள கிறிஸ்டியா ஃபிறீலான்ட், வெனிசுவேலாவில் அதிபர் நிக்கோலஸ் மாடூரோவை மீண்டும் அதிகாரத்தில அமர்த்தும் வகையில நடாத்தப்பட்டுள்ள இந்த தேர்தலானது, சனநாயக மீறல் என்பதுடன், முறைகேடானது எனவும் சாடியுள்ளார்.

அந்த வகையில் குறித்த அந்த தென் அமெரிகக் நாடானா வெனிசுவேலாவுடனான கனடாவின் அரசதந்திர உறவினை உடனடியாக நடப்புக்க வரும் வகையில் குறைத்துக் கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.