தீ விபத்தில் 16 குதிரைகள் பரிதாபமாக பலி!

ரொறன்ரோ சன்னிரூக் ஸ்டேபிள்ஸ் எனும் பூங்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 குதிரைகள் உயிரிழந்துள்ளதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த தீ விபத்தானது நேற்று (திங்கட்கிழமை) அதிகாலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் குறித்த பகுதிக்கு பலத்த சிரமங்களுக்கு மத்தியில் அதிகாலை 3 மணியளவிலேயே தீயணைப்பு வீரர்கள் நுழைந்தனர்.

சுமார் 50இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்த போதும் 16 குதிரைகளை காப்பாற்ற முடியவில்லை. இது தொடர்பில் கருத்து தெரிவித்த தீயணைப்பு துறை அதிகாரி, குறித்த பகுதியை கண்டுபிடிப்பதற்கு நீண்ட நேரம் சென்றுவிட்டதாக கூறினார்.

இருப்பினும், தீயணைப்பு வீரர்கள் 13 குதிரைகளை காப்பாற்றியதாகவும், ஆனால் துரதிஷ்டவசமாக 16 குதிரைகள் பலியாகிவிட்டதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.