ஸ்காபரோ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்!

ஸ்காபரோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆண் ஒருவர் பலியானதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

Milford Haven Drive மற்றும் Greenock Avenue பகுதியில், Scarborough Golf Club வீதி மற்றும் Ellesmere வீதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தின் போது ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதையும், மேலும் ஒரு ஆண் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதையும் ரொரன்ரோ அவசர மருத்துவப் பிரிவினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு உயிராபத்தான காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற போதிலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்த விபரங்கள் எவையும் இதுவரை வெளியிடப்படவில்லை.