நான்கு ஆண்டுகளுக்கு பிறகு எரிபொருள் விலையில் மாற்றம்!

கனடாவில் எதிர்வரும் தினங்களில், சில பகுதிகளில் எரிபொருளின் விலை அதிகரிப்பினை காணவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஒவ்வொரு பாகங்களிலும விலை அதிகரிப்பின் அளவு வேறுபட்டுக் காணப்படும் எனவும், அந்த வகையில் ஒன்ராறியோ, மரிட்டைம்ஸ், மனிட்டோபா, சாஸ்காச்சுவான் ஆகிய மாநிலங்களிலேயே இந்த விலை அதிகரிப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அல்பேர்ட்டா மற்றும் கியூபெக் மாநிலங்களில் அண்மையில் காணப்பட்ட எரிபொருள் உச்ச விலையுடன் ஒப்பிடுகையில், அங்கு எரிபொருள் விலை குறைவடையக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் ரொறன்ரோ, ஹமில்ட்டன், ஒட்டாவா உள்ளிட்ட பெரும்பாலான ஒனராறியோவின் தென் பிராந்தியங்களில பெற்றோலின் விலை லீட்டருக்கு இரண்டு சதத்தினால் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி பெற்றோலின் விலை லீட்டருக்கு 140.9 சதத்தினைத் தொடவுள்ள நிலையில், இது கடந்த நான்கு ஆண்டுகளில் ஏற்பட்ட ஆக உச்ச விலை என்று கூறப்படுகிறது.