ஸ்காபுரோ-ரூஜ்பார்க் தொகுதிக்கான அனைத்துக் கட்சிகளுக்குமான வேட்பாளர்கள் விவாதம்!

எதிர்வரும் ஜூன் 07 இல் நடைபெறவுள்ள ஒண்டாரியோ மாகாணத்துக்கான தேர்தலை முன்னிட்டு CCRA News ஏற்பாடு செய்திருந்த ஸ்காபுரோ-ரூஜ்பார்க் (Scarborough-Rouge Park) தொகுதிக்கான அனைத்துக் கட்சிகளுக்குமான (all-candidates meeting) வேட்பாளர்கள் விவாதம் நேற்று திங்கட்கிழமை மாலை 7 மணிக்கு St. Dunstan of Canterbury Church இல் நடைபெற்றது.


இவ்விவாதத்தில் Liberal கட்சியில் போட்டியிடும் சுமி ஷான், NDP கட்சியில் போட்டியிடும் Felicia Samuel, Green Partyயில் போட்டியிடும் பிரியன் De சில்வா மற்றும் ஒண்டாரியோ Trillium Partyயில் போட்டியிடும் Amit Pitamber ஆகியோர் கலந்துகொண்டனர்.

இத்தொகுதியில் பழமைவாத கட்சி (PC Party) வேட்பாளர் விஜய் தணிகாசலம் மற்றும் Libertarian கட்சி வேட்பாளர் Todd Byers  விவாதத்துக்கு அழைக்கப்பட்ட நிலையிலும் அவர்கள் சமூகமளிக்கவில்லை.