சீக்கிய பிரிவினைவாத விவகாரம்: கனடாவிடம் இந்தியா கோரிக்கை!

சீக்கிய பிரிவினைவாத இயக்கங்கள் தொடர்பில் கனடாவில் உள்ள அதன் அனுதாபிகள் வெளியிட்டுவரும் கருத்துகள் குறித்து கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ கவனம் செலுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.


கடந்த வெள்ளிக்கிழமை ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் இடம்பெற்ற பூளோக தவணை மீளாய்வு கூட்டத்தின் போது ஐ.நாவுக்கான இநதியாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இநதியா வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கனடாவின் பழங்குடியின மக்களுக்கு எதிரான ஒடுககுமுறைகளை களைவது தொடர்பில் கனடா முன்னேற்றகரமான பெறுபேறுகளை ஏற்படுத்தி வருவது தொடர்பிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி இன வேறுபாடுகளைக் களைந்து, இனச் சமத்துவம், பெண்கள் சமத்துவம் என்பவற்றினை மேப்படுத்துவதற்கு கனடா முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் எடுத்துக்காட்டப்பட்டு்ளளது.

அந்த வகையில் கருத்துச் சுதந்திரத்தினை கனடா சிறந்த வகையில் பேணி வரும் நிலையில், அந்த கருத்து வெளியிடும் சுதந்திரத்தினை துஸ்பிரயோகம் செய்து, சீக்கிய பிரிவினைவாத இயக்கங்கள் தொடர்பில், குறிப்பாக கனடாவில் உள்ள அதன் அனுதாபிகள் வெளியிட்டுவரும் கருத்துகள் குறித்து பிரதமர் ஜஸ்டின் ரூடோ கவனம் செலுத்த வேண்டும் எனவும் அதில் வலியுறுததப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளை தியாகிகளாக மேன்மைப்படுத்தும் கருத்துகள் குறித்து, குறிப்பாக 1985ஆம் ஆண்டில் எயர் இந்தியா விமானம் மீதான வெடிகுண்டுத் தாக்குதலுக்கு பொறுபபானவர் என்று கருதப்படும் நபரை புகழும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் ஜஸ்டின் ரூடோ இந்தியாவுக்கு பயணம மேற்கொண்ட வேளையிலும் இந்த விவகாரம் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் தற்போது ஐ.நா கூட்டத்தொடர் ஒன்றில் இந்த விடயத்தினை இந்திய அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.