19 வது அரங்காடல் “ஒரு பொம்மையின் வீடு”

மனவெளி கலையாற்றுக் குழுவின் 19 வது அரங்காடல் மார்க்கம் தியேட்டர் கலையரங்கில் ஜூன் 30, 2018 சனிக்கிழமை இரண்டு காட்சிகளாக இடம் பெறவுள்ளது.  இந்த அரங்காடலிலே நாடக மேதை என்றிக் இப்சனின் (Henrik Ibsen) உலகப் புகழ்பெற்ற நாடகமான “ஒரு பொம்மையின் வீடு” நாடகம் மூத்த நாடக கலைஞர் P.விக்னேஸ்வரனின் மொழியாக்கத்திலும் நெறியாள்கையிலும் மேடையேறவுள்ளது.


இந்த நாடகம் சம்பந்தமான ஊடக நண்பர்களுடனும் மனவெளியின் நலன் விரும்பிகளுடனும் ஒரு அறிமுக கலந்துரையாடல் கடந்த சனிக்கிழமை 12-மே-2018 அன்று காலை 9:30 மணிக்கு 4637 Kingston Road #5a (Manse Road &Kingston) ல் ஒரு சந்திப்பை மனவெளி கலையாற்றுக் குழு ஏற்பாடுசெய்திருந்தது.

நிகழ்வை துஷி ஞானப்பிரகாசம் ஆரம்பித்துவைத்தார்.  பின்னர் மனவெளி கலையாற்றுக் குழு சார்பில்  திரு செல்வன் நிகழ்வு ஏற்ப்பாடுகள் குறித்து விளக்கினார்.  மூத்த நாடக கலைஞர் P.விக்னேஸ்வரன் இம்முறை அரங்காடல் நிகழ்வில் இடம்பெறும் “ஒரு பொம்மையின் வீடு” நாடகம் குறித்தும் அதற்காக கடந்த ஒருவருடமாக ஒத்திகைகள் நடைபெறுவதாகவும்; இதில் தனது அனுபவங்களையும் சவால்களையும் வந்தவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

ஹென்ரிக் இப்சன் (Henrik Ibsen) 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நோர்வே நாட்டு நாடகாசிரியர். அவரை ஆங்கில மேடை நாடக இலக்கியத்தின் தந்தை வில்லியம் சேக்ஸ்பியருக்கு அடுத்ததாகச் சொல்லுறார்கள் !

இப்சனின் நாடகங்களில் ‘பொம்மை வீடு’ என்ற நாடகம் குறிப்பிடும் அளவு பேசுவதற்கு பெண்களின் துன்பங்களை மையக்கருவாக காட்சி படுத்தியது; பெண்கள் பிறந்ததே கலியாணம் கட்டவும், பிள்ளை பெறவும், குடும்பத்தைக் காக்கவும் என்பதை உடைத்து நோரா என்ற பெண்மணி (பொம்மையின் வீடு பிரதான பாத்திரம்) ஆண்களைப் போல உலக நடப்புகளில் நாட்டம் கொள்ள , அதை சுற்றி நடக்கும் குடும்ப சமுதாய பிரிவினை தான் “பொம்மை வீடு ” நாடகம்!

பொம்மை வீடு 1879 டிசம்பர் 21 டென்மார்க்கில் மேடை ஏற்றப்பட்டதில் இருந்து இன்றுவரை உலகெங்கும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இன்றுவரை பேசப்படும்; மேடை ஏற்றப்படும் ஒரு நாடகமாக இருக்கின்றது.

மிகுந்த பொருட்ச்செலவில் வரும் ஜூன் 30, 2018  மேடை ஏற்றப்படும் இந்த நாடகத்தை சகலரும் சென்று பார்த்து கலைஞர்களை ஊக்கப்படுத்தவேண்டும்.

புலம்பெயர் தமிழர் மத்தியில் நாடகங்களின் மீதான நாட்டத்தையும் வளர்க்க இம் முயட்சிகள் நிச்சயம் துணை நிற்கும்.

19th Arangadal