ஊழியர்களுக்கான ஊதியம் அதிகரிப்பு: கனேடிய மத்திய வங்கி!

தொழிலாளர் சந்தையில், ஊழியர்களுக்கான ஊதியத்தில் அதிகரிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக, கனேடிய மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


கனடாவின் தொழிற்சந்தை ஓரளவு சிறந்த மட்டத்தினை தொட்டுள்ள நிலையில், எதிர்வரும் சில காலங்களுக்கு வேலை வாய்ப்புகளில் கணிசமான அதிகரிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அரிது எனவும் கனேடிய மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

மேலும், மாநில அரசின் அந்த நடவடிக்கைக்கும் அப்பால் சம்பளத்தில் கடந்த மாதம் 2.9 சதவீதத்தில் இருந்து 3.1 சதவீதமாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதனையும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.