லிபரலை பின்தள்ளி முன்னேறியது NDP

ஒன்ராறியோவில் புதிய சனநாயக கட்சிக்கான மக்கள் ஆதரவு அதிகரித்துளளதாக அண்மைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

எதிர்வருட் யூன் மாதம் 7ஆம் நாள் நடைபெறவுள்ள ஒன்ராறியோ மாகாண சட்டமன்றத் தேல்தல் பரப்புரை நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக தொடங்கப்பட்டு மூன்றாவது நாளைத் தொட்டுள்ள நிலையில் இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் முன்னிலையில் முற்போக்கு பழமைவாதக் கட்சி உள்ள அதேவேளை, லிபரல் கட்சியைப் பின்தள்ளி புதிய சனநாயக கட்சி முன்னேறி மக்களின் ஆதரவைப் பெற்ற இரண்டாவது கட்சியாக காணப்படுகிறது.

ஒன்ராறியோவின் 2,534 வாக்காளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பொன்றில், 42.3 சதவீதம் பேர் முற்போக்கு பழமைவாதக் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதேவேளை லிபரல் கடசிககு 22.1 சதவீதம் பேர் தமது ஆதரவினை வெளிப்படுததியுள்ள நிலையில்,புதிய சனநாயகக் கட்சிக்கு 28.4 சதவீதம் பேர் ஆதரவளித்துள்ளனர்.

Parry Sound இல் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் விவாதத்தின் போது ஆன்ட்ரியா ஹோர்வத்தை டக் ஃபோர்ட் கடுமையாக தாக்கி பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த அந்த விவாதம் இடம்பெற்று ஒரு நாளின் பின்னர் நடாத்தப்பட்ட கருத்துக் கணிப்பிலேயே லிபரல் கட்சியை விட புதிய சனநாயக கட்சி மக்கள் ஆதரவினைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.