ப்ரூஸ் மெக்ஆர்த்தரினால் மேலும் பல இலங்கையர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம்!

கனடா- ரொறன்ரோவின் தொடர் கொலையாளியான ப்ரூஸ் மெக்ஆர்த்தரினால் மேலும் பல இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.


கனடாவின் ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன. இதன் நிமித்தம் அவர் நில சீரமைப்பாளராக பணியாற்றிய 100இற்கும் அதிகமான காணிகள், மோப்ப நாய்கள் கொண்டு சோதனைக்கு உள்ளாக்கப்படவுள்ளன

கனடாவின் காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.ஸ்கந்தராஜா நவரட்ணம், கிருஷ்ணகுமார் கணகரத்தினம் ஆகிய இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட எண்மரை கொலை செய்த அவர், தாம் நில சீரமைப்பாளராக வேலை செய்த காணிகளிலேயே புதைத்துவைத்த நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன.

இதன் அடிப்படையிலான விசாரணைகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறித்த நபரும் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.