பழைமைவாதக் கட்சி தேர்தல் பரப்புரையில் விதிமுறைகளை மீறுவதாக குற்றச்சாட்டு!

ஒன்ராறியோ முற்போக்கு பழைமைவாதக் கட்சியின் தலைவர் தேர்தல் பரப்புரைகளுக்காக பயன்படுத்திவரும் காணொளிப் பதிவுகள், தேர்தலுக்கான நிதிப் பயன்பாட்டு விதிமுறைகளை மீறும் வகையில் காணப்படுவதாக லிபரல் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.


அந்த வகையில் ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சியின் தலைவர டக் ஃபோர்ட்டின் பரப்புரை காணொளிகள் குறித்து, விசாரணை நடாத்துமாறு ஒன்ராறியோ தேர்தல்கள் ஆணையகத்திடம் லிபரல் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

தொலைக்காடசி செய்திகள் போன்ற காணொளிகளை தயாரிக்கும் Ford Nation Live இனைக் கண்காணிக்குமாறு தேர்தல் தலைமை அதிகாரியிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக இது தொடர்பில் லிபரல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் போர்வையில் அரசியல் விளம்பரங்களை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்கும் விதிமுறை மீறல்கள் இடம்பெறுவதாகவும் பழமைவாதக் கட்சியின் இவ்வாறான நடவடிக்கைகள் ஒன்ராறியோ மக்களை தவறான பாதையில் வழிநடத்திச் செல்வதாகவும் லிபரல் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.