டொரோண்டோ பகுதியில் நிலநடுக்கம்.

ஒரு சிறிய நிலநடுக்கம் டொரோண்டோவிற்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5:27 மணியளவில் (May 08, 2018- 5:27 PM) உணரப்பட்டுள்ளது.


ரிக்டர்  அளவுகோளின்படி (Richter Scale) 2.4 அளவு ஆக இது கணிக்கப்பட்டுள்ளது.

இது நிலமட்டத்தில் இருந்து 10 Km ஆழத்திலும்; டொரோண்டோ மாநகருக்கு (GTA) அண்மையில் உள்ள அஜஸ் (Ajax) நகரில் இருந்து 14Km  தூரம் தென் கிழக்காக இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என கனடிய வானிலை அவதானிப்பு நிலையம் அறிவித்துள்ளது.

இவ் நிலநடுக்கத்தினால் எவருக்கும் காயங்களோ அல்லது உடைமைகள் அழிவோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு கனடா (Eastern Canada) எந்த பெரிய டெக்டோனிக் தகடுகளுடனும் (tectonic plates) இல்லை என்றும் ஆனால் இவ்வகை சிறிய பூகம்பங்கள் அல்லது நடுக்கங்கள் மிக மிக அரிதானது என்றும் கனடிய வானிலை அவதானிப்பு நிலையம் தெரிவிக்கின்றது.