ஒண்டாரியோ மாகாண தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் இன்று முதல்!

ஒண்டாரியோ மாகாண தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் இன்று முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கின்ற நிலையில், மாகாண பாராளுமன்றத்தின் இறுதி அமர்வுகள் நேற்று இடம்பெற்றுள்ளன. நேற்று முதல்வர் கத்தலின் வின் ஆற்றிய உரை, முதல்வராக அவரது இறுதி உரையாக இருக்கக்கூடிய சாத்தியங்கள் பற்றி ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு, தான் அவ்வாறு சிந்திக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஜூன் 7ம் திகதி தேர்தல் தொடர்பிலேயே தாம் சிந்தித்து வருவதாகவும், தேர்தலுக்கு மறுநாள் பேசலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.


நேற்று முன்தினம் இடம்பெற்ற City TV விவாதத்தின் பின்னர், மாகாண முதல்வரும், லிபரல் கட்சி தலைவருமான கத்தலின் வின்னுக்கான ஆதரவு, டொரோண்டோ பெரும்பாகத்தில் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக சில கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.