ஒண்டாரியோவில் பாலியல்கல்வி பாடத்திட்டம் அகற்றப்படும்.

ஒண்டாரியோவின் அடுத்த முதல்வராக தான் தெரிவுசெய்யப்படும் பட்சத்தில், லிபரல் அரசினால் கொண்டுவரப்பட்ட பாலியல்கல்வி பாடத்திட்டத்தை அகற்றி, மாற்று பாடத்திட்டமொன்றை கொண்டுவரவுள்ளதாக, ஒண்டாரியோ முற்போக்கு பழமைவாத கட்சியின் தலைவர் Doug Ford தெரிவித்துள்ளார்.


குறித்த பாலியல் கல்வி பாடத்திட்டத்தை அமுல்படுத்த முன்னர், பெற்றோருடன் போதுமான அளவு கலந்துரையாடப்படவில்லை என அவர் மீளவும் சுட்டிக்காட்டியுள்ளார். முதல்வர் கத்தலின் வின் தலைமையிலான லிபரல் அரசாங்கத்தில், ஒண்டாரியோ பாடசாலைகள், சமூக பரிசோதனைக்கூடங்களாக மாற்றப்பட்டுள்ளதாகவும் Doug Ford குற்றம்சாட்டியுள்ளார்.