ரொறன்ரோ பாலத்தில் தொங்கிய காரினால் பொலிஸார் அதிர்ச்சி!

ரொறன்ரோ பாலத்திற்கு கீழ் தொங்கிக்கொண்டிருந்த கார், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், இதுகுறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

டான் பள்ளத்தாக்கு பார்க்வே அருகே, உள்ள மைல்வுட் பாலத்திலேயே குறித்த கார் தொங்கிக்கொண்டிருந்தது.

எனினும், குறித்த கார் தீயணைப்பு படையினரின் உதவியுடன் பத்திரமாக கீழிறக்கப்பட்டுள்ள போதும், ஏன் இந்த கார் பாலத்தில் தொங்கியது என பொலிஸார் தற்போது விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் இனந்தெரியாதோர் இச்செயலை நகைச்சுவைக்காக செய்திருக்க கூடுமென சந்தேகம் பொலிஸார், இது விபத்தின் பின் ஏற்பட்டதா? அல்லது யாரேனும் வேண்டுமென்றே அங்கே தொங்கவிட்டனரா? என பல கேள்விகளுடன் தங்களை விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.