ஒன்ராறியோ PC வேட்பாளர் தகுதியிலிருந்து தான்யா அலென் நீக்கம்!

தான்யா அலென் ஒன்ராறியோ முன்போக்கு பழமைவாதக் கட்சியின் வேடபாளராக இனி இருக்கமாடடார் என்று அந்த கட்சி அறிவித்துள்ளது.


இது தொடர்பில் ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சியின் தலைவர் டக் ஃபோர்ட்
நேற்றைய நாள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில விடயங்களில் அலெனின் குணாம்சங்கள் பொறுபபற்ற வகையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சி பலவேறு விதமான பார்வைகளை கொண்ட மக்களின் தொகுப்பாக உள்ளது என்றும், அவ்வாறான மக்கள் தமது கருத்துக்களை தெரிவிக்குமபோது அவற்றுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு உள்ளதையும் டக் ஃபோர்ட் சுட்டிக்காட்டியுள்ளார்.

தான்யா அலென் ஒன்ராறியோ பழமைவாதக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு போட்டியிட்டு தோல்வி அடைந்த போதிலும், அவர் நடைபெறவுள்ள ஒன்ராறியோ சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முனனர் தான்யா அலென் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கள் ஊடகங்களில் வெளியாகி சரச்சைகளைத் தோற்றுவித்துள்ளன.

2013ஆம் ஆண்டில் கியூபெக்கில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்ட அலென், இஸ்லாமியர்கள் அணியும் ஆடைகளை முகததை மறைககும் முகமூடிகள் என்று விமர்சித்திருந்ததுடன், இங்கிலாந்து மகாராணியார் ஓரின திருமணங்களை எதிர்க்க வேண்டும் என்று 2014ஆம் ஆண்டு தனது கீச்சக பதிவு ஒன்றிலும் தெரிவித்திருந்தார்.

இதுபோல மேலும் சில பழைய சம்பவங்கள் தற்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, அவர்மீதான விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதனை அடுத்து அலன் வெளியிட்டுள்ள கருத்துக்கள் கட்சியின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை எனவும், அலென் கட்சி வேட்பாளராக தேர்வாக முன்னர் வெளியிடப்பட்ட கருத்துக்கள் எனவும் பழமைவாதக் கட்சியின் பேச்சாளர் கடந்த மாதத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே தான்யா அலென் ஒன்ராறியோ முன்போக்கு பழமைவாதக் கட்சியின் வேடபாளராக இனி இருக்கமாடடார் என்ற அறிவிப்பினை டக் ஃபோர்ட் வெளியிட்டுள்ளார்.

ஆனால் பழமைவாதக் கடசித் தலைவர் டக் ஃபோர்ட்டின் இநத முடிவு தன்னை மிகவும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக அலன் தெரிவித்துள்ளார்.

குறித்த இந்த விடயம் தொடர்பிலும், ஒன்ராறியோ அரசியல் குறித்தும் தான் எதிர்வரும் சில நாட்களில் பல்வேறு விடயங்களை தெரிவிக்க வேண்டியுள்ளதாகவும் தான்யா அலென் மேலும் தெரிவித்துள்ளார்.