ஒன்றாரியோவில் பாதிக்கப்பட்ட மின்சார சேவைகளை சீர் செய்யும் பணிகள் தீவிரம்!

தெற்கு ஒன்றாரியோ பகுதியில் வீசிய பலத்த காற்றில் துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை, சீர் செய்யும் பணிகள் துரிதமாக இடம்பெற்று வருவதாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) வீசிய பலத்த காற்றில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததோடு, சுமார் ஒரு இலட்சம் வாடிக்கையாளர்கள் மின்சாரம் பாதிக்கப்பட்டு இருளில் மூழ்கினர்.

தற்போது துண்டிக்கப்பட்ட பெரும்பாலான மின்சார சேவைகள் சீர் செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களுக்கு மிகவிரைவில் மின்சார சேவை வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், புயல் எச்சரிக்கை முடிவுக்கு வந்த போதும் மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்னும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஹல்டன் பகுதியில் இருவர் மரங்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும்போது திடீரென்று ஒரு மரம் அவர்கள் மீது சாய்ந்தில் ஒருவரும், ஹமில்டன் பகுதியில் சாலையில் விழுந்து கிடந்த வயர்களை அப்புறப்படுத்த முயன்ற 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.