மீள பெறப்படும் CANBE உணவுகள்

வட அமெரிக்காவில் பிரசித்திபெற்ற தமிழர் நிர்வாகத்தில் இருக்கும் Canbe உணவகத்தின் உணவு வகைகள் சில ஒவ்வாமை காரணமாக மீள பெறப்படுகின்றன. இது குறித்து கனடிய உணவு தரக்கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

ஒவ்வாமை அபாயத்தின் காரணமாக Canbe Foodன் ரோல்ஸ் மற்றும் சமோசா உணவு பொருட்கள் மீண்டும் திரும்ப அழைக்கப்படுகின்றன.

இது குறித்து கனடிய உணவு தரக்கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கிளாஸ்-2 வகையை சேர்ந்த ஆபத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையானது ஒன்ராரியோ பூராகவும் விடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வாமையை ஏற்ப்படுத்தும் கடுகு உணவு பண்டங்களில் கலந்திருப்பதாலேயே இந்த முடிவு அறிவிக்கப்பட்டதாக கனடிய உணவு தரக்கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவிக்கின்றது.

மட்டன் ரோல்ஸ், மட்டன் சமோசா, வெஜ் சமோசா, சிக்கன் சமோசா, சிக்கன் ரோல்ஸ் ஆகியவை இதில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Canbe Food Inc. brand rolls and samosas recalled due to undeclared mustard as part of a food recall Warning (Allergen). Canadian Food Inspection Agency has issued this recall.

http://inspection.gc.ca/about-the-cfia/newsroom/food-recall-warnings/complete-listing/2018-04-28-r12230/eng/1525265249414/1525265251694