நாடாளுமன்ற உறுப்பினர் Gord Brown திடீர் மரணம்

மத்திய பழமைவாதக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கோர்ட் பிரவுன் (Gord Brown) நாடாளுமன்ற வளாகத்தில உள்ள அவரது அலுவலகத்தில் திடீரென உயிரிழந்தார்.

57 வயதான இவர் நீண்ட காலமாக அரசியலில் இருந்து வந்துள்ளதுடன், 2004ஆம் ஆண்டில் முதற்தடவையாக நாடாளுமன்றுக்கு தெரிவு செயயப்பட்டு, அரசியலில் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

இவர் திடீரென உயிரிழந்தமை குறித்து கட்சித் தலைவர்கள் பலரும் தமது அனுதாபங்களைப் பகிர்நது வருகின்றனர்.

புதன்கிழமை இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு மு்னனர், அன்று காலையில் ஹொக்கி விளையாடியதகவும், அதன்பின்னர் நாடாளுமன்றிற்கு வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.