கனடா நாட்டில் வசிக்கும் ஈழத்து மாணவி சாதனை!

கனடா நாட்டில் வசிக்கும் ஈழத்து மாணவி ஒருவர் Queen’s University Accelerated Route to Medical School (QuARMS) என்கின்ற மருத்துவ படிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு வருடமும் சுமார் 1500 இற்கு மேற்ப்பட்டவர்கள் இந்த துறைக்கு விண்ணப்பிப்பார்கள். அதில் 10 பேர்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுவர். அந்த 10 பேர்களில் ஒருவராக ஈழத்தை சேர்ந்த மாணவியான விதுசா யோகதாசன் என்பவர் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது ஈழத் தமிழர்களாகிய நமக்கு பெருமை சேர்ப்பதாகும்.

இந்த மருத்துவப்படிப்பு எற்றுக்கொள்ளப்படுவதற்கு உயர்நிலை பள்ளியில் எடுக்கப்படும் அதி உச்ச மதிப்பெண்கள் மட்டும் பெற்றிருந்தால் போதாது. இதர பாடத் திட்டங்கள் சாராதச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருக்கவேண்டும் (Extra curricular activities) .

சாதாரணமாக 4-5 வருடங்கள் இளங்கலை (undergraduate) படித்துவிட்டு தான் மருத்துவத்துறைக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், இந்த QuARMS ஊடாக ஏற்றுக்கொள்ளப்படுபவர்கள் 2 வருட இளங்கலை படித்து விட்டு நேரடியாக கனடாவின் பிரசித்திப்பெற்ற மருத்துவத்துறைக்கு செல்லமுடியும். கனடாவில் மருத்துவத்துறைக்கு மிகவும் பிரசித்திபெற்று விளங்குவது Queen’s பல்கலைக்கழம் ஆகும்.

QuARMS Steps…….

Step 1:
High School nominates you for the Chancellor’s Scholarship plus QuARMS
Step 2:
Apply for an Undergraduate Degree in the Faculty of Arts & Science at Queen’s University
Step 3:
2 years in Undergrad with enriched QuARMS sessions. Maintain a cumulative 3.5 GPA.
Step 4:
Complete 2 years with direct entry to School of Medicine (No MCAT).
Step 5:
You are now a first year medical student!
Step 6:
4 year MD degree: Doctor of Medicine