நோர்த் யோர்க் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நிரந்தர நினைவகம்!

நோர்த் யோர்க் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவகம் ஒன்றை அமைப்பது தொடர்பில் ரொரன்ரோ நகரபிதா கருத்து வெளியிட்டுள்ளார்.

ரொரன்ரோவில் கடந்த வாரம் நபர் ஒருவர் சிற்றூர்தி ஒன்றினால் பாதசாரிகளை மேதி தாக்குதல் மேற்கொண்டதில் 10 பேர் பலியாதுடன், 16 பேர் படுகாயடைந்துள்ளமை குறி்ப்பிடத்தக்கது.

இந்த நிலையிலேயே குறித்த அந்த சம்பவத்தில் பலியானவர்களின் நினைவாக நிரந்தர நினைவகம் ஒன்றினை அமைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இதனை அமைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நினைவகம் அமைப்பது குறித்து உள்ளூர் சமூக மன்றங்களுடனும், உள்ளூராட்சி அதிகாரிகளுடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட பகுதிக்கு சென்று, இரங்கல் செலுத்திய பொதுமக்களுக்கு தமது நன்றிகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.