அதிஷ்டவசமாக கிடைத்த பணத்தால் ஆபத்தில் சிக்கிக் கொண்ட கனேடியர்!

கனடா – ஒன்றோரியோ பகுதியில் 30 ஆயிரம் டொலர் பெறுமதியான காசோலையை மோசடி செய்யப்பட்டுள்ளதாக நபர் ஒருவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டொனால்ட் மார்ஷல் என்பவருக்கு அண்மையில் நிஸ்ஸான் டீலர்ஷிப் என்ற இடத்தில் இருந்து 30319.03 அமெரிக்க பெறுமதியான காசோலை ஒன்று வந்துள்ளது.

குறித்த காசாலை தனது பெயருக்காகவும், முகவரிக்கும் எழுதப்பட்டுள்ளதை அவதானித்த டொனால்ட் அது தனக்கே வந்தது என நினைத்து அதனை பணமாக மாற்றி செலவு செய்துள்ளார்.

காசோலை மூலம் கிடைத்த பணத்தினை முழுவதுமாக செலவு செய்துவிட்ட நிலையில். மீண்டும் வங்கியிடம் இருந்து டொனால்ட்டுக்கு கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. அதில் “காசோலை முறைகேடு நடந்துள்ளதாகவும், டொனால்ட் காசோலை மூலம் பெற்றுக்கொண்ட பணத்தினை வட்டியுடன் மீண்டும் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடிதம் கண்டு அதிர்ந்த டொனால்ட் உடனடியாக வங்கிக்குச் சென்று தான் செல்வந்தர் அல்ல எனவும் அவ்வாறு தன்னால் பணத்தை செலுத்த முடியாது எனக் கூறி உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும் அவருடைய கோரிக்கையை நிராகரித்த வங்கி நிர்வாகம் “காசோலை எங்கிருந்து, எதறாகாக வந்தது என்பதை முழுமையாக அறிந்து கொள்ளாமல் செலவு செய்தது குற்றம் எனக் குறிப்பிட்டு, பணத்தை மீளச் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.