தேர்தலில் வெற்றிபெற்றால் மின் கட்டணத்தை 12 சதவீதத்தால் குறைப்பதாக உறுதி!

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால், ஹைட்ரோ கட்டணத்தை 12 சதவீதத்தால் குறைப்பதாக ஒன்ராறியோ பழமைவாதக் கட்சியின் புதிய தலைவர் டக் ஃபோர்ட், உறுதியளித்துள்ளார்.

ஒன்ராறியோ சட்டமன்றுக்கான தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள நிலையில், இத் தேர்தலில் வெற்றிபெற்றால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “இந்த கட்டணக் குறைப்பை பல்வேறு அளவுகளில் மேற்கொள்ள இருப்பதாகவும், அது சராசரியாக ஆண்டுக்கு 173 டொலர்களை கண்டணம் செலுத்துபவர்களுக்கு மிச்சப்படுத்திக் கொடுக்கும்.

இது ஒரு சரியான தொடக்கமாக இருக்கும். வரி செலுத்துபவர்களின் பணப் பைக்கு இந்த 173 டொலர்கள் மீண்டும் செல்லும் என கூறினார்.