வாகனத் தாக்குதலில் உயிரிழந்த 10பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

நோர்த் யோர்க் வாகனத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த 10பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை தலைமை மரண விசாரணை அதிகாரி Dirk Huyer வெளியிட்டுள்ளார்.


இந்த ஊடகவிலாளர் சந்திப்பில் தலைமை மரண விசாரணை அதிகாரி Dirk Huyer உடன், ரொரன்ரோ மனித கொலை தொடர்பான விசாரணைப் பிரிவின் தலைமை அதிகாரி Insp. Bryan Bott உம் பங்கெடுத்திருந்தார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு:

ரொரன்ரோவைச் சேர்ந்த 45 வயதான ரேனுகா அமரசிங்க(Beutis Renuka Amarasingha, 45, of Toronto), வூட்பிரிட்ஜைச் சேர்ந்த 33 வயதான ஆனட்ரியா பிரடன்(Andrea Bradden, 33, of Woodbridge), ரொரன்ரோவைச் சேர்ந்த 83 வயதான கிரால்டின் பிரடி(Geraldine Brady, 83, of Toronto), ரொரன்ரோவைச் சேர்ந்த 22 வயதான சோ ஹீ ச்சங்(So He Chung, 22, of Toronto), ரொரன்ரோவைச் சேர்ந்த 30 வயதான ஆன் மரியா டீ’அமிக்கோ(Anne Marie D’Amico, 30, of Toronto), ரொரன்ரோவைச் சேர்நத 94 வயதான மேரி எரிசபெத் ஃபோர்ஸித்(Mary Elizabeth Forsyth, 94, of Toronto), ரொரன்ரோவைச் சேர்ந்த 22 வயதான ஜீ ஹூன் கிம்(Ji Hun Kim, 22, of Toronto), ரொரன்ரோவச் சேர்ந்த 80 வயதான டொறோதி ஸிவெல்(Dorothy Sewell, 80, of Toronto), ரொரன்ரோவைச் சேர்ந்த 45 வயதான சுல் மின் காங்(Chul Min Kang, 45, of Toronto), ரொரன்ரோவைச் சேர்ந்த 85 வயதான முனிர் அப்டோ ஹபிப் நிஜார்(Munir Abdo Habib Najjar, 85, of Toronto).

கடந்த திங்கட்கிழமை நோர்த் யோர்க் பகுதியில் அரங்கேறிய, தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததுடன், 16 பேர் படுகாயமடைந்திருந்தனர். இந்த தாக்குதலில் கைது செய்யப்பட்டுள்ள 25 வயதுடைய றிச்மண்ட் ஹில் பகுதியைச் சேர்ந்த அலெக் மினாசின் மீது 10 முதல் தரக் கொலை குற்றச்சாட்டுகளும், 13 கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.