கனடாவில் கொலை செய்யப்பபட்ட கிருஷ்ணகுமார் கனகரத்தினத்தின் அஞ்சலி நிகழ்வு!

கனடாவில் கொலை செய்யப்பபட்ட ஈழ அகதியான கிருஷ்ணகுமார் கனகரத்தினத்தின் அஞ்சலி நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) St. Mother Teresa Catholic Academy யில் நடைபெற்றது.

ரொறென்ரோ நகரில் நடைபெற்ற இந்நிகழ்வில், அவரது நினைவேந்தல் நிகழ்வில் அவரது உறவினர்கள், நண்பர்களுடன், 2010 சன்சீ கப்பல் மூலம் கனடா சென்ற சக அகதிகளும் கலந்து கொண்டனர்.

கடந்த 2010ஆம் ஆண்டு எம்.வீ.சன்சீ கப்பல் ஊடக அகதிகளாக கனடா சென்ற கிருஷ்ணகுமார் கனகரத்தினம், கடந்த ஆண்டு கனடாவின் தொடர் கொலையாளியான மெக் ஆர்த்தரினால் கொலை செய்யப்பட்டார்.

கிருஷ்ணகுமார் கனகரத்தினத்தின் அகதி அந்தஸ்த்து மறுக்கப்பட்டு, அவரது தொழில் அனுமதியும் நிராகரிக்கப்பட்ட நிலையில், நாடுகடத்தலுக்கு உட்படாதிருக்கும் நோக்கில் தலைமறைவாகி இருந்த நிலையிலேயே அவர் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.