வரவு செலவுத் திட்டங்களில் மில்லியன் டொலர்கள் குறைத்து மதிப்பீடு!

ஒன்ராறியோ மாகாண லிபரல் அரசாங்கம் கடந்த காலங்களில் தனது வரவு செலவுத் திட்டங்களில் மில்லியன் கணக்கான டொலர்களை குறைத்து மதிப்பீடு செய்துள்ளதாக கணக்காய்வு திணைக்களத்தின் நாயகம் போனி லைசிக் தெரிவித்துள்ளார்.

இன்னும் சில வாரங்களில் ஒன்ராறியோ மாகாணத்துக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கணக்காய்வாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை லிபரல் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

பல மில்லயன் டொலர்கள் பெறுமதியான பற்றாக்குறைகளை மிகவும் பாரிய அளவில் குறைத்து தனது நிதி அறிககைகளில் லிபரல் அரசாங்கம் மதிப்பிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதனால் ஒன்ராறியோவின் வரவு செலவுத் திடடத்தில் காணப்படும் துண்டுவிழும் தொகையானது, உண்மையான பற்றாக்குறையினை விடவும் குறைவாக காணப்படுவதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.