திருடப்பட்ட வாகனம் விபத்து: ஒருவர் உயிரிழப்பு- மூவர் படுகாயம்

போல்டொன் கவுண்ரிசைட் டிரைவ் பகுதியில், நெடுஞ்சாலை 50 (HWY 50) இல் திருடப்பட்ட வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை ஒரு மணியளவில் குறித்த விபத்து நேர்ந்துள்ளது. இவர்களுள் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், ஏனைய இருவரும் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

விபத்து சம்பவித்த பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சரக்கு ஊர்திகள் நிறுத்துமிடம் ஒன்றில் திருட்டில் ஈடுபட்டவர்களே இந்த விபத்தில் சிக்கிக் கொண்டனர் என்றும், அவர்கள் திருடிவிட்டு அங்கிருந்து தப்பியோடும் போது இந்த விபத்துச் சம்பவித்துள்ளதாகவும் கருதப்படுகிறது.

இந்த விபத்து பீல் பிராந்தியத்திற்கும், யோர்க் பிராந்தியத்திற்கும் இடைப்பட்ட எல்லையில் சம்பவித்துளள நிலையில், விசாரணைகள் யோர்க் பிராந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.