ரொறன்ரோவில் வான் தாக்குதலில் இலங்கை பெண்ணும் உயிரிழப்பு?

கனடாவின் ரொறன்ரோவில் பொதுமக்கள் மீது வானை மோதி பலரை கொலை செய்த சம்பவத்தில் இலங்கை பெண்மணியொருவரும் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் ஹொரணை பகுதியை சேர்ந்த ரேணுகா அமரசிங்க என்ற 46 வயதான பெண்ணே இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் டொரோண்டோ கல்விச்சபையில் வேலைசெய்து வருபவர் என்றும் 7 வயதில் ஒரு மகனும் இவருக்கு உள்ளார் என்றும் ஸ்காபோரோ கிழக்கு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பேஸ்மெண்ட் இல் வசித்துவந்துள்ளார்.

இறந்தவர்கள் ஆரம்பத்தில் குவைத்தில் பணியாற்றிய பின்னர் கனடாவிற்கு குடிபெயர்ந்து கடந்த 17 ஆண்டுகளாக கனடாவில் பணியாற்றி வருகின்றார். டொரொண்டோ பௌத்த ஆலய சபையில் ஒரு அங்கத்தவராகவும் இருந்துகொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரொறன்ரோவில் கடந்த 23ஆம் திகதி பாதசாரிகள் மீது வானை மோதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததுடன், 16 பேர் படுகாயமடைந்திருந்தனர். தாக்குதல் சம்பவம் தொடர்பில் 25 வயதுடைய அலெக் மினாஷியன் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.