கனடா ரொரான்ரோவில் வாகனம் பாதசாரிகளை மோதியதில் 10 பேர் பலி, பலர் படுகாயம். – Updated

ஃபின்ச் மற்றும் ஷெப்பார்ட் அவென்யு இடையே யங்க் வீதியில் 2 கிலோமீட்டர் நீளத்துக்கு பாதசாரிகள் வாகனம் மூலம் தாக்கப்பட்டதில் குறைந்தது பத்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.  இச் சம்பவம் இன்று மதியம் 1:30 மணியளவில் நடந்துள்ளது.

தெருவெங்கும் உடல்கள் சிதறி கிடப்பதாகவும் போலீசாரும் அவசர ஊர்திகளும் அவ்விடத்தை நோக்கி விரைந்துகொண்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Updated:

இன்றைய சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்திருப்பதை உறுதிசெய்துள்ளதுடன் 15 பேர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் உள்ள வணிக நிறுவனங்களை இன்று மூடும் படியும் நகர பிதா John Tory சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகளின் படி பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மேலும் பலர் அவசர சிகிச்சைக்காக வந்துகொண்டிருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

CBS செய்தி சந்தேக நபரை அலெக் மினசியன்  (Alek Minassian, 25 years) என அடையாளம் காட்டியுள்ளன. யு.எஸ். சட்ட அமலாக்க ஆதாரங்கள் CBS நியூஸ் பத்திரிகைக்கு இதை தெரிவித்துள்ளது.

வாகனம் மூலம் பாதசாரிகளை தாங்கியவர் தப்பி ஓடியபோது காவல்துறையினார் அவரை கைதுசெய்துள்ளனர்.

இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்றும் இது ஒரு விபத்து அல்ல என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.